ரின் மீன் வறை





தேவையான பொருட்கள்:
ரின் மீன் - 1
காரட் - 2
வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
ரின் மீனில் உள்ள நீரை வடித்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின்பு மீனை சேர்த்து கிளறி, காரட் துருவலையும், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வறுக்கவும்.
சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.