ரத்தப்பொரியல்
தேவையான பொருட்கள்:
ஆட்டு ரத்தம் - 1 கப்
கடலைப்பருப்பு - கைப்பிடி
தேங்காய் துருவல் - 1/4 கப்
சோம்பு - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லித் தூள் - சிறிது
பட்டை - ஒரு துண்டு
சோம்பு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி ரத்தத்தை ஒரு கிண்ணத்தில் வைத்து மூடி வேக வைக்கவும். கத்தியால் நடுவில் விட்டு பார்த்து ஒட்டாமல் வருகிறதா என உறுதிப்படுத்தி இறக்கவும்.
பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் சோம்பு சேர்த்து ஒரு சுற்று அரைத்து வைக்கவும்.
வேக வைத்த ரத்தத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
நறுக்கிய ரத்தத்தில் கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு தாளித்து வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பிசைந்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கி பரிமாறவும்.