மெட்ராஸ் பெப்பர் சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1 கிலோ

வெங்காயம் - 2

காய்ந்த மிளகாய் - 6

இஞ்சி - இரண்டு அங்குல துண்டு

பூண்டு - 10 பற்கள்

மிளகு - 4 தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள்த்தூள் - 1 தேக்கரண்டி

தனியாத்தூள் - 1 தேக்கரண்டி

பட்டை - 2 துண்டு

இலவங்கம் - 2

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 1/2 கோப்பை

உப்புத்தூள் - தேவையான அளவு

செய்முறை:

கோழியை நன்கு சுத்தம் செய்து வேண்டிய அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

மிளகு, சீரகம், காய்ந்தமிளகாய், ஆகியவற்றை மைய அரைத்து, அத்துடன் மஞ்சள்தூள், பாதியளவு உப்புத்தூள் சேர்த்து கோழி இறைச்சியுடன் சேர்த்து நன்கு பிசறி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு சட்டியில் எண்ணெய்யை ஊற்றி பட்டை, இலவங்கப்பூ போட்டு, பொடியாக அரிந்த வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக ஆனவுடன், ஊறிய கோழித்துண்டுகளை போடவும். அதனைத் தொடர்ந்து தனியாத்தூளையும், இஞ்சி பூண்டு விழுதையும் போட்டு நன்கு கிளறவும்.

அனலை மெதுவாக வைத்துக் கிளறவும். பிறகு அரை கோப்பை நீரை ஊற்றி மீதியுள்ள உப்புத்தூளையும் போட்டு வேகவிடவும்.

அடிக்கடி கிளறி விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் மேலும் சிறிது ஊற்றவும்.

கோழி நன்கு சுருள வெந்தவுடன் இறக்கி டவும். எலுமிச்சை ரசம் (சாறு) ஒரு மேசைக்கரண்டி தெளித்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இதனை சிற்றுண்டி, சாத வகைகளுக்கு பக்க உணவாக சேர்த்துக்கொள்ளலாம்.