மெக்ஸிகன் சிக்கன் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - 1/2 கிலோ

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி

வார்செஸ்டர்சயர் சாஸ் (Worcestershire sauce) - 3 தேக்கரண்டி

எலுமிச்சம் பழம் - 1

பூண்டு - 10 பற்கள்

எண்ணெய் - 5 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழிக்கறியைச் சுத்தம் செய்து, எலும்புகளை நீக்கிவிட்டு சற்று பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு கோழித் துண்டுகளுடன் மிளகாய்த் தூள், மிளகுத் தூள், உப்பு, வார்செஸ்டர்சயர் சாஸ் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து பிரட்டி குறைந்தது ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு பிரட்டி வைத்துள்ள கோழித் துண்டுகளைப் போட்டு அரை பதம் வேகவிடவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டு போட்டு நன்றாக வேகவிட்டு பரிமாறவும்.

குறிப்புகள்:

தக்காளி சாஸ் ஊற்றி கலந்து சூடாகப் பரிமாறவும்.