மூளை வறுவல் (2)
தேவையான பொருட்கள்:
மூளை - 2
வெங்காயம் - 1/2
தக்காளி - 1/2
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிது
பட்டை - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மூளையை மேலே உள்ள மெல்லிய தோலை எடுத்து விட்டு கட் பண்ண வேண்டாம். குழையாமல் புளி வடிகட்டியில் போட்டு நான்கு தடவை கழுவி நீரை வடிகட்டவும்.
அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி வைக்கவும்.
இரும்பு வாணலியில் எண்ணெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி ஒரு பட்டை, வெங்காயம், இஞ்சி பூண்டு போட்டு தாளித்து தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி பிசறி வைத்திருக்கும் மூளையை போட்டு லேசாக உடையாமல் கிளறவும்.
மூடி போட்டு சிம்மில் வேக விடவும்.
பிறகு தோசை கரண்டி வைத்து அப்படியே திருப்பவும்.
இரண்டு பக்கமும் வெந்தவுடன், ஒரு மூளையை நான்கு துண்டுகளாக போடவும், அதே மாதிரி இரண்டு மூளையையும் துண்டு போட்டு மேலும் ஒரு முறை வதக்கி ஒரு தேக்கரண்டி டால்டா (அல்லது) பட்டர் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.