மூளை வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மூளை - 1

சின்ன வெங்காயம் - 50 கிராம்

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லி தூள் - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

அதனுடன் மஞ்சள் தூள், மிளகு தூள், மல்லித்தூள், உப்பு போட்டு அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு மூளையை கழுவிப்போட்டு சிறு தீயில் வதக்கி நீர் வற்றியவுடன் சுருள கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: