மூளை மிளகு வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேக வைக்க:

மூளை - 2

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி

கொத்தமல்லி தழை - சிறிது மேலே தூவ

உப்பு - தேவையான அளவு

வறுத்து பொடிக்க:

மிளகு - 10

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பட்டை - சிறிய துண்டு

கிராம்பு - 2

ஏலம் - 1

சோம்பு - 1/4 தேக்கரண்டி

முழு தனியா - 1 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - 1 1/2 தேகரண்டி

டால்டா - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

மூளையை மேலே உள்ள மெல்லிய தோலை எடுத்து விட்டு கட் பண்ண வேண்டாம் குழையாமல் புளி வடிகட்டியில் போட்டு நான்கு தடவை கழுவி நீரை வடிகட்டவும்.

மூளையை மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு குக்கரில் கால் டம்ளர் தண்ணீர் விட்டு இரண்டு விசில் விட்டு இறக்கவும்.

பொடி செய்ய வேண்டிய பொருட்களை வெறும் தவ்வாவில் கருக விடாமல் வறுத்து ஆற வைத்து பொடி செய்யவும்.

ஒரு இரும்பு வாணலியில் எண்ணெய், டால்டா இரண்டையும் ஊற்றி பொடித்த பொடி முழுவதும் போட்டு வேக வைத்த மூளையயும் போட்டு தண்ணீர் முழுவதும் சுண்ட விட்டு அதை எட்டு துண்டுகளாக போட்டு நல்ல முறுகலாக வறுத்தெடுத்து கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: