மூளை பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மூளை - 2

வெங்காயம் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 2

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு மூளையை போட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் இறக்கி நறுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி மிளகுத்தூள், மல்லித்தூள் போட்டு கிளறி மூளையை போட்டு கிளறவும்.

மசாலாவுடன் மூளை நன்கு கிளறியவுடன் தேவையானால் முட்டை 2 உடைத்து ஊற்றி கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்: