முள்ளங்கி நெத்திலி பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - 1/4 கிலோ

நெத்திலி கருவாடு - 100 கிராம்

புளிக்கரைசல் - 1/4 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பூண்டு - 4 பல்

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

நெத்திலி கருவாட்டை சுத்தம் செய்து கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நெத்திலியைப் போட்டு பொரியவிடவும்.

கருவாடு பொரிந்து வாசனை வந்தவுடன், மிளகாய் தூள், புளிக்கரைசல் தவிர மற்ற பொருட்களைச் சேர்த்து வதங்கவிடவும்.

வதங்கியதும் மிளகாய் தூள், புளிக்கரைசல் சேர்த்து வேகவிடவும்.

அனைத்தும் சேர்ந்து திரண்டு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.