முருங்கைக்கீரை முட்டை பொரியல் (1)

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முட்டை - 2

ஆய்ந்த முருங்கைக்கீரை - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 50 கிராம்

சீரகம் - 1 தேக்கரண்டி

வரமிளகாய் - 3

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கீரையை அலசி நீரை வடித்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி, வரமிளகாயை கிள்ளி வைக்கவும்.

அடுப்பில் வாயகன்ற கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் தேய்த்துப் போட்டு, கிள்ளி வைத்த வரமிளகாய் போடவும்.

கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து வெடிக்க விட்டு சின்ன வெங்காயம் சேர்க்கவும்.

வெங்காயம் சிவந்ததும் கீரையைப் போட்டு பிரட்டவும்.

உப்பை ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் கலந்து கீரையில் தெளித்து கிளறி, மூன்று நிமிடம் கழித்து முட்டைகளை உடைத்து கலக்கி ஊற்றவும்.

அடுப்பை சிம்மில் வைத்து நன்றாகப் பிரட்டி முட்டை பொரியல் போல் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: