முட்டை வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

கடலை மாவு - 2 தேக்கரண்டி

அரிசி மாவு - 3 தேக்கரண்டி

கார்ன் மாவு - 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

அரைத்த மல்லி, புதினா விழுது - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முட்டையை அவித்து நீளவாக்கில் இரண்டாக மஞ்சள் கரு உடையாமல் நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய முட்டைகளை மல்லி, புதினா விழுதில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும்.

மாவு வகைகள், உப்பு, மிளகாய்த்தூளை சிறிது நீர் தெளித்து பிசறி முட்டைகளை அந்த மாவில் பிரட்டி எடுக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு முட்டைகளை மெதுவாக போடவும். சுற்றிலும் மீண்டும் எண்ணெய் விடவும். சிவந்ததும் மறுபுறம் திருப்பிப்போட்டு வெந்ததும் எடுத்து பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

சாதத்துடன் பரிமாறவும்