முட்டை பொடிமாஸ்





தேவையான பொருட்கள்:
முட்டை - 4
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
சில்லி ஃப்ளேக்ஸ் - 2 தேக்கரண்டி
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு நறுக்கியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.
ஓரளவு வதங்கியதும், முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
கூடவே சில்லி பிளேக்ஸ், உப்பு சேர்த்து முட்டை வேகும் வரை வதக்கி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இது இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ்.