முட்டை பூஜ்யா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 3

வெங்காயம் - 3

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

மிளகு தூள் - தேவையான அளவு

மிளகாய் தூள் - தேவையான அளவு

மஞ்சள் தூள் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகு தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வதங்கியவுடன் தக்காளியை போட்டு நன்கு குழையும் வரை வதக்கவும்.

எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கியவுடன் கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும். ஊற்றியவுடன் அடிப்பிடித்துக் கொள்ளாமல் இருக்க கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

பின் அதை கொத்தி கொத்தி சிறு சிறு துண்டுகளாக கொத்து பரோட்டா போல் கொத்தவும்.

முட்டை நன்கு சிறு சிறு துண்டுகளான பின் அடுப்பை அணைத்து வேறு பாத்திரத்தில் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்புகள்: