முட்டை புரோக்கோலி தாளிப்பு
தேவையான பொருட்கள்:
புரோக்கோலி - 1
முட்டை - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
நல்லமிளகு பொடி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புரோக்கோலியை சுத்தம் செய்து சிறு சிறு கிளைகளாக பிரித்து வைக்கவும்.அதை சுடு தண்ணீரில் போட்டு 2 நிமிடம் கழித்து எடுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பின் புரோக்கோலியைப் போட்டு, ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் 1/2 கப் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு வேகவைக்கவும். அடுப்பை சிறிய தீயில் வைக்கவும் (புரோக்கோலி பூப்பகுதி வதக்கும் போதே வெந்துவிடும், தண்டை வேகவைப்புதற்கு தண்ணீர் விடுகிறோம்).
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து விட்டு அதில் உப்பு போட்டு 2 சிட்டிகை நல்லமிளகுப்பொடி போட்டு ஒரு கரண்டியைக் கொண்டு நன்றாக அடித்து வைக்கவும்.
பின்னர் ஒரு தவாவில் முட்டையை ஆம்லெட் போட்டு பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
புரோக்கோலி தண்டு வெந்து தண்ணீர் வற்றி வந்ததும் நல்லமிளகுப்பொடி போட்டு எண்ணெய் விட்டு கிண்டி விட்டு கடைசியில் முட்டைதுண்டுகளைச் சேர்த்து பரிமாறவும்.