முட்டை பீன்ஸ் பொரியல்
0
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
பீன்ஸ் - 250 கிராம்
நெய் - 50 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பீன்ஸை பொடியாக நறுக்கவும்.
பீன்ஸை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அவித்து எடுக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கவும்.
பீன்ஸ் ஆறியதும் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு மஞ்சள் சேர்த்து கலந்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு முட்டை கலந்த பீன்ஸ் கலவையை கொட்டி முட்டை வேகும் வரை கிளறவும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.