முட்டை ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

சோம்பு - 3/4 தேக்கரண்டி

இஞ்சி - 1/2 அங்குலத்துண்டு

பூண்டு - 5 பல்

தேங்காய் துருவல் - 1/4 கப்

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - 3/4 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் முட்டையை வைத்து முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து மேல் ஓட்டை நீக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காய்த்துருவல், சீரகம், மிளகு, சோம்பு, பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும்.

பிறகு அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து மசாலா போல் கலந்து வைத்துக் கொள்ளவும்.

வேக வைத்த முட்டையை நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும். மசாலாக் கலவையில் நறுக்கி வைத்திருக்கும் முட்டையை போட்டு நன்கு பிரட்டி வைக்கவும்.

வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா தடவிய முட்டையை போட்டு இரண்டு நிமிடம் கழித்து திருப்பி விட்டு மசாலா முட்டையுடன் சேர்ந்தாற் போல் வந்தததும் மூன்று நிமிடம் கழித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: