முட்டைக்கோஸும் கொத்துக்கறியும்
தேவையான பொருட்கள்:
கொத்துக்கறி - 100 கிராம்
முட்டைக்கோஸ் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பச்சைமிளகாய் - 4
பூண்டு - 5 பல்
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் - 10
கசகசா - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - ஒரு சில்
தேங்காய்ப்பூ - 1 கப்
பட்டை - 1
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிளகாய், சோம்பு, சீரகம், கசகசா, தேங்காய் சில், பூண்டு, பட்டை ஆகியவற்றை அரைக்கவும்.
ஒரு கடாயில் கொத்துக்கறியை கழுவி பிழிந்து போட்டு, மஞ்சள் தூள், உப்பு, அரைத்தவற்றை போட்டு, பொடியாக நறுக்கிய பாதி வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து 2 கிளாஸ் தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
தண்ணீர் சுண்டி கறி வெந்தவுடன், வேறு கடாயில் எண்ணெய் விட்டு துளி சோம்பு, சீரகம் போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய மீதி வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பொடியாக நறுக்கிய கோஸை சேர்த்து உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டு கோஸை வேகவிடவும். (அ) கோஸ் உடன் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிட்டு வடிகட்டி போடவும்.
வெங்காயம் வதங்கியவுடன் கொத்துக்கறியும், முட்டைக்கோஸையும் கொட்டி சிறுதீயில் 10 நிமிடம் வதக்கி தேங்காய்ப்பூவை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.