மீன் வறுவல் (6)
தேவையான பொருட்கள்:
மீன் - 1 கிலோ
வெங்காயம் - 1
பூண்டு - 4 பற்கள்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
கடலை மாவு - 1/2 கோப்பை
எலுமிச்சைரசம் - 1 மேசைக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
செய்முறை:
மீனை நன்கு கழுவிக்கொண்டு வேண்டிய துண்டுகளாக்கி கொள்ளவும்.
பூண்டு, வெங்காயத்துடன் மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், எலுமிச்சைரசம், உப்பு ஆகியவற்றை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
மீன் துண்டுகளுடன் அரைத்த விழுதை சேர்த்து கைகளால் நன்கு பிசறி விட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு கடலைமாவுடன் மிளகுத்தூள், ஒரு சிட்டிகை உப்புத்தூள் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
சட்டியில் போதுமான அளவு எண்ணெயை ஊற்றி காயவைக்கவும். பிறகு மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கடலைமாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு இரண்டு புறமும் பொன்னிறமாக வறுத்து எடுத்து பரிமாறவும்.