மீன் வறுவல் (4)
0
தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ
இஞ்சி - 1 1/2 இன்ச் துண்டு
பூண்டு - 8 பல்
குருமிளகு - 1 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 2
சீரகம் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5 இலை
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் பொரிக்க - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீன், கறிவேப்பிலை தவிர மற்றவைகளை மிக்ஸியிலோ, அம்மியிலோ போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு கறிவேப்பிலை சேர்த்து இன்னொரு சுற்று சுற்றவும். கறிவேப்பிலை ஒன்றிரண்டாக அரைந்தால் தான் சுவை தரும்.
அரைத்த மசாலாவை மீனில் தடவி 3 மணிநேரம் ஊறவிடவும். பின் எண்ணெயை காயவைத்து மீன் துண்டுகளை பொரித்து எடுத்து சூடாக பரிமாறவும்.