மீன் வறுவல் (2)





தேவையான பொருட்கள்:
மீன் - 4
தனி மிளகாய் தூள் - 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மீன் துண்டுகளை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து நன்கு பிசறி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 3 அல்லது 4 துண்டு மீனை போட்டு 3 நிமிடம் கழித்து திருப்பி போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்.
தேவைப்பட்டால் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். இதைப் போல் எல்லா மீன் துண்டுகளையும் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.