மீன் வறுவல் (1)
0
தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடலை மாவு - 3 மேசைக்கரண்டி
காய்ந்த ரோஸ்மெரி - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - பாதி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனைச் சுத்தம் செய்து கொள்ளவும்.
மீனுடன் ரோஸ்மெரி, கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊறவைத்த மீன்களைப் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
ரோஸ்மெரியை ஃப்ரெஷ்ஷாகவும் சேர்க்கலாம்.
கடலை மாவு, எலுமிச்சை சாறு சேர்ப்பதால் மீன்களை உடையாமல் பொரித்தெடுக்கலாம்.