மீன் ரோஸ்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கானங்கெளுத்தி மீன் (ஐல மீன்) - 3

வெங்காயம் - 2

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

சீரகத் தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனை சுத்தம் செய்து சிறிது உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து அரை பாகம் வேகும் அளவிற்கு பொரித்து வைக்கவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

சிறிது வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் மிளகு தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

வதக்கிய வெங்காயத்தில் பாதியை எடுத்து வைத்து விட்டு மீதியுள்ள வெங்காயத்தில் பொரித்த மீனைப் போடவும்.

எடுத்து வைத்துள்ள மீதி வெங்காயத்தையும் மீனின் மேல் போட்டு மூடி வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் பிரியும் வரை மூடி வைக்கவும். எண்ணெய் மிதந்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: