மீன் மஞ்சூரியன் மற்றும் ப்ரெட் டோஸ்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஏதாவது பெரிய வகை மீன் - 10 துண்டுகள்

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 6 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கிரேவிக்கு:

எண்ணெய் - மீனை பொரித்து மீதமாகும் எண்ணெய்

பொடியாக நறுக்கிய பூண்டு - 7 பல்

நறுக்கிய வெங்காயம் - 3

நறுக்கிய குடை மிளகாய் - 1/2

தக்காளி சாஸ் - 4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 8 இலைகள்

ப்ரெட் டோஸ்டிற்கு:

ப்ரெட் - ஒரு பாக்கெட்

நெய் - 3 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் மீனில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி ஒரு மணிநேரம் வைத்து பின் அதிலிருந்து 2 துண்டு மீனை மட்டும் முள் நீக்கி தனியே வைக்கவும்.

மீதமுள்ள 8 துண்டு மீனையும் எண்ணெயில் மொறுகாமல் முக்கால் பாகம் வேகும் அளவுக்கு பொரித்து எடுத்து வைக்கவும்.

இப்பொழுது மீதமுள்ள எண்ணெயில் பூண்டு போட்டு 2 நிமிடம் வறுத்து(கரியக் கூடாது) அதில் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி வெங்காயம் நன்கு வெந்து வதங்கியதும் குடைமிளகாயும் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கவும்.

பின் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும். சாஸ் சேர்த்ததும் ஒரு மாதிரி வாடை வருவது போல தோன்றும். பயப்பட வேண்டாம் 2 நிமிடம் வெங்காயக் கலவையுடன் கலந்து வதங்கியதும் அந்த வாடை போய் நல்ல மஞ்சூரியன் மணம் வரும்.

பிறகு அதில் தனியே வைத்த முள் இல்லாத மீன் துண்டுகள் சேர்த்து உடைத்து விடவும்.

அதில் ஒரு ஸ்பூன் கார்ன் ஃப்ளாரை 3/4 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். தேவையான அளவுக்கு உப்பும் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது நன்கு 10 நிமிடம் கொதித்ததும் பொரித்து வைத்த மீனையும் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

இது சூடாக சாப்பிடுவதை விட ஒரு மணிநேரத்திற்கு பின் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

ப்ரெட் டோஸ்டிற்கு தவாவில் கால் தேக்கரண்டி நெய்யை சுற்றி தடவி அதில் 3 ஸ்லைஸ் ப்ரெட் வைத்து ஒரு நிமிடம் இருபுறமும் திருப்பி விட்டு சுட்டு எடுத்து சூடாகவே கிரேவியுடன் பரிமாறவும். மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: