மீன் பொரியல் (1)
தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் - ஒரு மூடி
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
வர மிளகாய் - 10
மல்லி விதை - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
செய்முறை:
தேங்காயை துருவி பாலெடுக்கவும். ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்து சீரகம், மல்லி சேர்த்து அரைத்து தேங்காய் பாலில் கலக்கவும்.
மீனை கழுவி சிறிது உப்பு, மிளகாய்ப்பொடி சேர்த்து பிசறி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
மறுபடியும் கடாயில் பாதி எண்ணெய் விட்டு மீனை பொரிக்கவும். முறுவலாக வறுக்க கூடாது.
கடாயில் மீதி எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி மசாலாவுடன் கலந்த தேங்காய் பாலை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மீனையும் போடவும். நன்கு வற்றி ஓரளவு கெட்டியானவுடன் இறக்கி பரிமாறவும்.