மீன் பொரியல்





தேவையான பொருட்கள்:
பொரித்த மீன் - 5 துண்டுகள்
தக்காளி - 3
வெங்காயம் - 6
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுந்து, சீரகம், கடலைபருப்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
முழு பூண்டு - 1
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
வழக்கமாக பொரிக்கும் மீனை விட கூடுதலாக 5 நிமிடங்கள் மொறு மொறுப்பாகும் வரை வேகவிட்டு முள் நீக்கி உதிர்த்து வைக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். பூண்டை உரித்து லேசாக தட்டவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
பின்னர் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அத்துடன் தூள் வகைகளை சேர்த்து கிளறவும்.
பின்னர் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின்னர் உதிர்த்த மீன்களை சேர்த்து வதக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
சாம்பார், ரசம், புளிக்குழம்பு போன்றவைகளுடன் பக்க உணவாக பரிமாறவும்.