மீன் புட்டு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முள்வாளை மீன் (துப்புவாளை) - 1 (வாளை மீன் போல ஆனால் நிறைய முள் இருக்கும்)

வெங்காயம் - 2

தேங்காய் - 3/4 கப்

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனை சுத்தம் செய்து 1/2 உப்பு தேக்கரண்டி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

தேங்காய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகம், சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை கொரகொரப்பாக தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.

வேக வைத்த மீனிலிருந்து முட்களை நீக்கி உதிர்த்தது போல எடுக்கவும்.

முட்கள் அதிகமாக இருப்பதால் கவனமாக எடுக்கவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

முக்கால் பாகம் வதங்கியதும் உதிர்த்த மீன், அரைத்த தேங்காய் கலவை, தேவையான உப்பு போட்டு 5 நிமிடம் நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

மீனை வேகவைப்பதற்கு உப்பு சேர்த்திருப்பதால் வெங்காயம், தேங்காய்க்கு வேண்டிய அளவு மட்டும் உப்பு சேர்க்கவும்.