மீன் புட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முள் இல்லாத மீன்- 1

சோம்பு - 1/2 தேக்கரண்டி

முந்திரி - 5

வெங்காயம் - 1 கப்

இஞ்சி,பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப

கருவேப்பிலை,கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குறைந்த அளவு கொதிக்கும் தண்ணீரில் உப்பு சிறிது மற்றும் மீன் சேர்த்து வேக வைத்து எடுத்து உதிர்த்து வைத்து கொள்ளவும்.

ஆவியிலும் வேக வைக்கலாம்.

கடாயில் எண்ணெய், சோம்பு, முந்திரி, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிய பின் உதிர்த்த மீன் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் கருவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: