மீன் டோஸ்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரட் - 4 துண்டுகள்

நீரில் அடைக்கப் பட்ட டூனா மீன் - ஒரு கேன் (அல்லது) ஒரு கோப்பை வேகவைத்து உதிர்த்த மீன்

முட்டை - 2

வேகவைத்த புரோக்கலி - 1 கோப்பை

வெங்காயம் - 1

தக்காளி - 1

மயோனைஸ் - 1/4 கோப்பை

மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி

சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி

வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கிவைக்கவும்.

தக்காளியின் உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு சதைப்பற்றை மட்டும் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

புரோக்கலியை பொடியாக நறுக்கி வெங்காயம் தக்காளியுடன் கலந்து வைக்கவும்.

முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு நுரைக்க அடித்து அதில் மயோனைஸ் மற்றும் சில்லி சாஸையும் சேர்த்து கலக்கி வைக்கவும்.

பிரட்டை டோஸ்ட்டரில் அல்லது தோசைக்கல்லில் போட்டு இளஞ்சிவப்பாக டோஸ்ட் செய்துக் கொள்ளவும்.

பிறகு வெண்ணெயை பிரட்டின் ஒரு பகுதியில் மட்டும் தடவி வைக்கவும்.

அதை தொடர்ந்து டூனா மீனை சொட்ட பிழிந்து பிரட்டின் மீது பரவலாக வைத்து தொடர்ந்து காய்கறி கலவையயும் வைக்கவும்.

பிறகு தயாரித்து வைத்துள்ள முட்டைக் கலவையை பிரட்டின் மீது பரவலாக ஊற்றவும்.

பிறகு தயாரித்த ரொட்டிதுண்டுகளை பேக்கிங் செய்யும் தட்டில் வைத்து அவனை 400 டிகிரி Fல் வெப்பத்தில் வைத்து அதன் நடுவிலுள்ள தட்டில் வைத்து பேக் செய்யவும்.

முட்டை நன்கு வேகும்வரை வைத்திருந்து வெளியில் எடுத்து குறுக்காக வெட்டி சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: