மிளகு முட்டை
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
வேக வைத்த முட்டை - 3
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
குருமிளகு பொடி - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டையை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
தண்ணீரில் முட்டை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து தண்ணீர் கொதிக்கத் தொடங்கி சரியாக 7 நிமிடத்தில் தீயை அணைத்து விடவும்.
சிறிது நேரம் கழித்து எடுத்து தோல் உரிக்கலாம். பிறகு முட்டையை ஒரு எக் ஸ்லைஸ்ர் கொண்டோ அல்லது கத்தியாலோ சிறு சிறு தூண்டுகளாக வெட்டி வைக்கவும்.
பிறகு எண்ணெயை காயவைத்து வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் நன்கு வதக்கவும்.
பின் அதனுடன் குருமிளகையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி முட்டையையும் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து இறக்கி பரிமாறவும்.