மிளகு இறால் பொரியல்
0
தேவையான பொருட்கள்:
இறால் - 300 கிராம்
மிளகு - இரு கரண்டி
பூண்டு தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பூண்டுதூள் போட்டு பிரட்டி 15 நிமிடம் வைத்திருந்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.