மட்டன் ராரா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 300 கிராம்

தக்காளி - 4

வெங்காயம் 3

கரம் மசாலா - 2 தேக்கரண்டி

மிளகாய் - 1 தேக்கரண்டி

ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளி, வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.

ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி, மிளகாய்தூள் சேர்க்கவும்.

சுத்தம் செய்த மட்டனை நிறம் மாறும் வரை வதக்கி, உப்பு, கரம் மசாலா சேர்த்து 1/4 கப்புக்கும் குறைவாக நீர் விட்டு, கிளறி 3 விசில் வைக்கவும்.

சூடாக இருக்கும் பொழுதே ஆய்ந்த கறிவேப்பிலையை சேர்த்துக்கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: