மட்டன் யாழ்ப்பாண வறுவல்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மட்டன் - 500 கிராம்

சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

தனியா தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

பட்டை - 1

கிராம்பு - 1

சோம்பு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

அரைக்க:

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கசகசா - ஒரு தேக்கரண்டி

இஞ்சி - சிறிது

பூண்டு - 8 பற்கள்

வறுத்து தூள் செய்ய:

மிளகாய் - 10

சீரகம் - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

பட்டை - 1

ஏலக்காய் - 1

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கறியுடன் சேர்த்துப் பிசறி வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, வறுத்துத் தூள் செய்ய வேண்டிய பொருட்களை வறுத்துத் தூள் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் ஆகியவற்றைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதக்கியவற்றுடன் பிசறி வைத்திருக்கும் கறிக் கலவையைச் சேர்க்கவும்.

பிறகு உப்பு, தனியா தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

கறியில் உள்ள நீர் வற்றியவுடன் தூள் செய்தவற்றைச் சேர்த்து தீயைக் குறைத்து வைத்து 10 நிமிடங்கள் கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

கறி கலவையை குக்கரில் வேக வைப்பதாக இருந்தால் 7 விசில் வரும் வரை வேகவிட்டு, பிறகு கடாயில் கொட்டி நீர் வற்றியவுடன் தூள் சேர்க்கவும்.