மட்டன் முட்டை சாப்ஸ்
தேவையான பொருட்கள்:
மட்டன் - 500 கிராம்
முட்டை - 4
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
அரைக்க வேண்டியவை:
மிளகாய் - 12
மிளகு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கசகசா - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
இஞ்சி - சிறிது
பட்டை - 1
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
தேங்காய் - 2 சில்
மஞ்சள் தூள் - சிறிதளவு
செய்முறை:
மட்டனை சாப்ஸ் போல் வெட்டிக்கொள்ளவும். அரைத்தவற்றை மட்டனில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
குக்கரில் மட்டனை போட்டு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 7 விசில் வைத்து வேக விட வேண்டும். பிரஷ்ர் அடங்கியவுடன் திறந்தால் சிறிது நீர் இருக்கும். அவற்றை அப்படியே அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.
வேறு ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை போட்டு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடிக்க வேண்டும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கறியை முட்டையில் நனைத்து போட வேண்டும். உடனே திருப்பி போட்டு எடுக்க வேண்டும். ஒரு முறைக்கு 3 அல்லது 4 கறியை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.