மட்டன் பெப்பர் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ

மிளகு‍ - 2 தேக்கரண்டி

பட்டை - சிறு துண்டு

கிராம்பு ‍- 2

சோம்பு - 1 தேக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

இஞ்சி - 2 அங்குலத் துண்டு

பூண்டு ‍- 10 பற்கள்

மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க‌

உப்பு - தேவையான‌ அளவு

செய்முறை:

மிளகுடன் பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து மையாக‌ அரைத்துக் கொள்ளவும். மட்டனைச் சுத்தம் செய்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் சுத்தம் செய்த‌ மட்டனைச் சேர்த்துப் பிரட்டவும்.

அதனுடன் அரைத்த‌ விழுது மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்துக் கிளறி, உப்பு போட்டு குக்கரை மூடி 4 முதல் 5 விசில் வரும் வரை மட்டனை வேக‌ விடவும்.

பின்னர் திறந்து தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதே போல் அரைத்த‌ மசாலாவுடன் கறி, உப்பு சேர்த்து வேக வைத்து, அதன் பிறகு தாளித்து நீளமாக‌ நறுக்கிய‌ வெங்காயம் சேர்த்து வதக்கி, வேக வைத்த கறியைச் சேர்த்துக் கிளறி இறக்கலாம்.

காரத்திற்கேற்ப‌ மிளகு மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து கொள்ளலாம்.

ரச‌ம் சாதத்துடன் சாப்பிடுவதற்கு அருமையாக‌ இருக்கும்.