மட்டன் சுக்கா வறுவல்
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/4 கிலோ
கடலை மாவு - 3 தேக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கராண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கராண்டி
சோம்பு - ஒரு தேக்கராண்டி
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 3
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கராண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கறியை முக்கால் பதம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
எண்ணெயை சூடாக்கி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்பு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
கறியை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின் எல்லாத்தூளையும் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு வறுக்கவும்.
தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வறுக்கவும். மசாலா கறியுடன் சேர்ந்தவுடன் கடைசியாக கடலைமாவு சேர்த்து வறுத்தெடு த்து பரிமாறவும்.