மட்டன் சுக்கா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ

பொடியாக நீளமாக நறுக்கிய இஞ்சி - 1 அங்குலம்

தட்டிய பூண்டு - 10 பல்

விளக்கெண்ணைய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

பொடிக்க:

பட்டை - 1 அங்குலம்

கிராம்பு - 3

அன்னாசிப்பூ - 1

வத்தல் பொடி - 2 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

கறியை கழுவி அதனுடன் பூண்டு, இஞ்சியை சேர்த்து குக்கரில் போட்டு விளக்கெண்ணையை ஊற்றி வதக்கவும்.

பின் பொடித்த பொடியை போட்டு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 15 நிமிடம் சிம்மில் விசில் போட்டு வைக்கவும்.

இறக்கி ஆறியபின் வாணலியில் வெண்ணைய் 2 தேக்கரண்டி, எண்ணைய் 1 தேக்கரண்டிபோட்டு வெந்த கறியை அப்படியே வறட்டி எடு்து பரிமாறவும்.

குறிப்புகள்: