மட்டன் சாப்ஸ் வறுவல்
0
தேவையான பொருட்கள்:
மட்டன் - 500 கிராம்
மிளகாய் - 12
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
தேங்காய் - 2 சில்
இஞ்சி - சிறிது
பூண்டு - 6 பல்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
எண்ணெய் - 50 மில்லி லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கறியைத் தவிர மற்றவற்றை எல்லாம் நன்கு அரைத்து கறியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கறி கலவையை கொட்டி நன்கு கிளற வேண்டும். கறியை அடிப்பிடிக்காமல் கிளறினால் எண்ணெய் பிரிந்து வரும்.
அதில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கடாயை மூடி வேக விட வேண்டும்.
கறி வெந்தவுடன் தீயை குறைத்து கறியை கிளறி கொண்டே இருந்தால் கடாயில் ஒட்டாமல் வரும் போது இறக்கி பரிமாறவும்.