மட்டன் சாப்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டுக் கறி - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 5 பல்

இஞ்சி - சிறிய துண்டு

தயிர் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் பொடி - 1 மேசைக்கரண்டி

மிளகாய் பொடி - 1 மேசைக்கரண்டி

சோம்பு பொடி - 1 மேசைக்கரண்டி

எலுமிச்சம் பழம் - 1/2 மூடி

பெரிய வெங்காயம் - 3

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

பட்டை, கிராம்பு, இலை - தாளிக்க

எண்ணை - 50 மில்லி லிட்டர்

உப்பு தேவையான அளவு

செய்முறை:

முதலில் கறியை நன்கு கழுவி அம்மியில் அல்லது சமயலறை சுத்தியல் கொண்டு லேசாக தட்டிக் கொள்ளவும்.

சி. வெங்காயம், இஞ்சி, பூண்டு எல்லாம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பிறகு கறியுடன் தயிர், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, சோம்பு பொடி, எலுமிச்சை சாறு, அரைத்த விழுது, உப்பு சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை மெல்லிய நீளமான துண்டுகளாக நறுக்கி எண்ணையில் சிவக்க வறுத்து எண்ணையில்லாமல் வடித்து வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, கிராம்பு, இலை, கறிவேப்பிலை தாளித்து கறிக் கலவையைப் போடவும்.

மிதமான தீயில் வைத்து அடிக்கடி நன்றாக கிளறி விட்டு கறி நன்கு வெந்து சுருளும் வரை வதக்கி இறக்கி வறுத்த வெங்காயம்,மல்லி இலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: