மட்டன் கடாய் வறுவல்
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
அரைத்த இஞ்சி & பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
பட்டை - ஒரு அங்குல அளவு
ஏலக்காய் - 2
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 9 தேக்கரண்டிஅல்லது 50 மில்லி லிட்டர்
மல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மட்டனை நன்கு சுத்தம் செய்து சிறு, சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் இஞ்சி,பூண்டு அரவை, மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய மல்லித்தழை மற்றும் தேவையான அளவு உப்பும் சேர்த்து கிளறி அது வேகும் அளவிற்கு (முக்கால் டம்ளர்) தண்ணீர் சேர்க்கவும்.
அடுப்பில் வைத்து மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து பத்து நிமிடம் டைம் பார்த்து பின் இறக்கவும்.
மூடியை திறந்து தண்ணீர் விட்டிருந்தால், அடுப்பில் வைத்து தண்ணீரை சுண்ட செய்யவும்.
தண்ணீர் சுண்டியதும், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.
சூடு வந்ததும் பட்டை, ஏலக்காய் போட்டு பின் மட்டன் கலவையை அதில் சேர்க்கவும்.
மூன்று நிமிடத்திற்க்கு ஒரு முறை கிளறவும்.
நன்கு சுருண்டு வந்ததும், அடுப்பை லேசாக வைத்து கிளறிக்கொண்டு இருக்கவும்.
பதினைந்து நிமிடத்திற்கு பின் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.