மசாலா முட்டை வறுவல்
தேவையான பொருட்கள்:
அவித்த முட்டை - 4 (கீறி வைக்கவும்)
வெங்காயம் - 2
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மசாலா செய்வதற்கு:
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மசாலா செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு பவுலில் போட்டு சிறிது நீர் சேர்த்து கெட்டியாகக் கலந்து, அத்துடன் முட்டைகளைச் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, ஊறிய முட்டைகளைச் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி கடுகு தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், வறுத்த முட்டைகளைச் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
வெள்ளை சாதம் முதல் பிரியாணி வரை அனைத்திற்கும் ஏற்றது