மசாலா மீன்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மீன் துண்டுகள் ‍- 1 கிலோ

இஞ்சி‍ - ஒரு விரல் நீள‌த் துண்டு

பூண்டு - 6 பல்

பட்டை ‍ - ஒரு சிறு துண்டு

ஏலக்காய் ‍- 2

எலுமிச்சை சாறு ‍- 1/2 தேக்கரண்டி

மீன் மசாலா தூள் ‍ - 50 கிராம்

கார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி

எண்ணெய் ‍ - பொரிக்க‌ தேவையான‌ அளவு

உப்பு - தேவையான‌ அளவு

செய்முறை:

மீன் துண்டுகளை நன்றாக‌ சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்து வைக்கவும்.

அரைத்தவற்றுடன் மீன் மசாலா தூள், கார்ன் ஃப்ளார், எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து பேஸ்ட் போல‌ கலந்து வைக்கவும்.

இந்த மசாலாக் கலவையை மீன் துண்டுகளின் மேல் தடவி, அரை மணி நேரம் ஊறவைக்கவும். (வெயிலிலும் வைக்கலாம்).

வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மிதமான‌ தீயில் வைத்து மீன் துண்டுகளைப் பொரித்தெடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: