மங்களூர் ரவா ஃபிஷ் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வஞ்சரம் அல்லது பாம்ஃப்ரெட் (வாவல்) - 1/2 கிலோ

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

பூண்டு (சிறியது) - 1

எலுமிச்சை பழம் - ஒன்று

சன்ன ரவை - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனைச் சுத்தம் செய்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூளுடன் மஞ்சள் தூள், உப்பு, நசுக்கிய பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு திக்கான பேஸ்டாக கலந்து மசாலாவைத் தயார் செய்து கொள்ளவும்.

மீனின் மேல் தயார் செய்த மசாலாவை தடவி 1 - 2 மணி நேரம் ஊறவிடவும்.

பிறகு மீனை ரவையில் நன்றாக பிரட்டி எடுக்கவும்.

மீனை வறுக்க தோசைக் கல்லில் சில மேசைக்கரண்டிகள் எண்ணெயை விட்டு காய்ந்ததும் மீனைப் போட்டு வறுக்கவும்.

இரண்டு பக்கமும் சிவக்கவிட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

எலுமிச்சைக்கு பதிலாக புளிக்கரைசல் பயன்படுத்தலாம்.

மிளகாய் தூளுக்கு பதிலாக மிளகாய் வற்றலை அரைத்துச் சேர்க்கலாம்.

பூண்டு விழுதுக்கு பதிலாக ஃப்ரெஷ்ஷாக அரைத்த இஞ்சி, பூண்டு விழுதும் சேர்க்கலாம்.

இங்கே இந்த ஃபிஷ் ஃப்ரைக்கு தேங்காய் எண்ணெயைத் தான் அதிகமானவர்கள் பயன்படுத்துவார்கள். வேறு எண்ணெயில் வறுத்தாலும் சுவையாக இருக்கும்.

இந்த வகை வறுவலுக்கு பாம்ஃப்ரெட் தான் சுவையானது. ஆனால், வேறு வகை மீனிலும் செய்யலாம்.

உணவகங்களில் மீனின் வாடையை நீக்கத் தோலை நீக்கிவிட்டு இந்த வறுவலைச் செய்வார்கள்.