போன்லெஸ் சிக்கன் ஃப்ரை
0
தேவையான பொருட்கள்:
எலும்பு நீக்கிய கோழி - 1/2 கிலோ
மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
வினிகர் - 1 மேசைக்கரண்டி
கார்ன் ஃப்ளார் [சோள மாவு] - 2 மேசைக்கரண்டி
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
முட்டை (வெள்ளைக்கரு) - 1
கேசரி கலர் - தேவைப்பட்டால்
எண்ணெய் - வறுத்து எடுப்பதற்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழியில் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், வினிகர், சோயா சாஸ், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு, கார்ன் ஃப்ளார் போட்டு பிசறி, ஃப்ரிட்ஜில் (freezer) ஃப்ரீசரில் வைக்கக்கூடாது.
அரைமணி நேரம் வைத்து எடுத்து எண்ணெய்யை காயவைத்து 4 அல்லது 5 துண்டங்களாக போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.