பேச்சுலர்ஸ் மட்டன் சுக்கா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1 கிலோ

மிளகாய் பொடி - 2 மேசைக்கரண்டி

மல்லி பொடி - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

கரம்மசாலா பொடி - 1 மேசைக்கரண்டி

மிளகு தூள் - 2 தேக்கரண்டி

வெங்காயம் - 200 கிராம்

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 3

எண்ணெய் - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கறியை கழுவி தண்ணீரை வடித்து விட்டு குக்கரில் மிளகாய்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்பொடி, கரம்மசாலாபொடி போட்டு பிசறி, பொடியாக நறுக்கிய 100 கிராம் வெங்காயம், தக்காளி, கீறிய பச்சைமிளகாய், உப்பு போட்டு கிளறி [தண்ணீர் விடாமல்] குக்கரை மூடி 10 விசில் குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மீதி வெங்காயம் வதக்கி, குக்கரில் பிரஷர் போனதும் திறந்து கொட்டவும்.

கறி தண்ணீர் விட்டுதான் இருக்கும். சிறிது நேரம் கிளறினால் தண்ணீர் வற்றிவிடும்.

தண்ணீர் வற்றியவுடன் மிளகுத்தூள் போட்டு சிறுதீயில் கிளறவும். 10 நிமிடம் கிளறினால் சுவையான சுக்கா வறுவல் தயார்.

குறிப்புகள்: