பெல் பெப்பர் சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ

பெல் பெப்பர் - 2

வெங்காயம் - 2

தக்காளி ப்யூரி - 1 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 1/2 மேசைக்கரண்டி

தயிர் - 2 மேசைக்கரண்டி

வினிகர் - 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

சில்லி சிக்கன் மசாலா - 2 தேக்கரண்டி

மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

துருவிய இஞ்சி - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம் மற்றும் பெல் பெப்பரை நறுக்கிக் வைக்கவும்.

சிக்கனைச் சுத்தம் செய்து தயிர், உப்பு மற்றும் வினிகர் சேர்த்துப் பிரட்டி 15 நிமிடங்கள் ஊறவிடவும்.

பிறகு ஊறவைத்த சிக்கன் கலவையில் சிறிது தண்ணீர் தெளித்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் மற்றும் துருவிய இஞ்சி சேர்த்து தாளிக்கவும்.

அத்துடன் வெங்காயம் மற்றும் பெல் பெப்பரைச் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் வேக வைத்த சிக்கனைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு தூள் வகைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்க்கவும்.

அத்துடன் தக்காளி ப்யூரி சேர்த்து சுருள வதக்கி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறும், மல்லித் தழையும் சேர்க்கலாம்.