பெப்பர் சிக்கன்
தேவையான பொருட்கள்:
கோழி - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி (அல்லது) 1 தேக்கரண்டி மிளகாய் தூள் தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
மிளகு - 1 - 2 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை - தாளிக்க
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயம் நீள வாட்டில் வெட்டி வைக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கவும்.
பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகு பொடி செய்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கவும். இதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைந்து வந்ததும் தூள் வகை எல்லாம் (மிளகு தூள் தவிற) சேர்த்து பிரட்டி எண்ணெய் பிரிய விடவும்.
இதில் கறிவெப்பிலை மற்றும் சிக்கன் துண்டுகள் சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும். நீர் விட தேவை இல்லை.
சிக்கன் வெந்ததும் மிளகு தூள் தூவி 2 நிமிடம் திறந்து வைத்துபிரட்டி எடுத்து பரிமாறவும்.