புதினா மல்லி கோழி வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத பெரிய கோழித்துண்டுகள் - 1 கிலோ

கெட்டித்தயிர் - 6 மேசைக்கரண்டி

புதினா இலைகள் - ஒரு கைப்பிடி

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

சீரகம் - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 8

வினீகர் - 3 மேசைக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புதினா, கொத்தமல்லி, சீரகம், பச்சை மிளகாயை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மஞ்சள் தூள், வினீகர் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கோழியை தகுந்த அளவு உப்புடன் சேர்த்து நன்கு பிசிறி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.

கோழியைச் சேர்த்து அவை பொன்னிறமாக வறுபடும் வரை சமைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: