பீர்க்கங்காய் முட்டை பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நறுக்கிய பீர்க்கங்காய் - 1 கப்

முட்டை - 1

கடுகு - 1 தேக்கரண்டி

நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/2 கப்

நறுக்கிய பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - ஒரு கொத்து

தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காய் எண்ணெயை காய வைத்து கடுகு சேர்த்து பொரிந்தவுடன் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு பீர்க்கங்காய் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.

பிறகு முட்டையை உடைத்து ஊற்றி ஒரு நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: