பீப் ப்ரை





தேவையான பொருட்கள்:
பீப் - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு
எண்ணெய் - 2 அல்லது 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு அதனை நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய கறியில் மிளகாய்த்தூள், தயிர், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து கலந்து வைக்கவும்.
கால் மணி நேரம் கழித்து குக்கரில் கறிக்கலவையை தண்ணீர் சேர்க்காமல் வைத்து 5 விசில் வந்ததும் எடுக்கவும்.
வெந்த கறியில் தண்ணீர் இருந்தால் வற்ற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து கறியை போட்டு வதக்கவும்.
கறி நன்கு வதங்கியதும் இறக்கி வைத்து பரிமாறவும்..