பள்ளிபாளையம் சிக்கன்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் - 12
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை எலும்பு இல்லாமல் கொட்டைப்பாக்கு அளவிற்கு சிறு துண்டுகளாக்கி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி விதையை எடுத்து விட்டு மிளகாயை மட்டும் தனியாக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கிள்ளி வைத்த மிளகாயைப் போட்டு, சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிக்கனை நன்கு வதக்கவும். இரண்டு கை அளவு தண்ணீரை தெளித்துவிட்டு மூடி வேகவைக்கவும்.
தண்ணீர் வற்றி சிக்கன் வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
பிரியாணி, தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்குப் பொருத்தமான பக்க உணவு இது.